2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

77 பேரைக் கொன்ற கொடூரன்; அரசுக்கு எதிராக வழக்கு

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}



நோர்வேயில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் என்பவரால்  கடந்த 2011-ஆம் ஆண்டு வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.  

இத்தாக்குதல்களினால் சுமார் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்  வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பீரிவிக்கை ஆபத்தான குற்றவாளி என அறிவித்து 23 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தனிமை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

இவர் தற்போது தன்னை விடுவிக்குமாறு கூறி நீதித்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அக் கடிதத்தை விசாரித்த நீதிபதிகள் ப்ரீவிக்கை ஒரு ஆபத்தான குற்றவாளி என்று கருதி, அவரை 23 வருடங்கள் தாண்டி கூட தனிமை சிறையில் அடைத்து வைப்பதே பொதுமக்களுக்கு நல்லது என்று கூறியுள்ளனர்.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரீவிக், தன்னை தனிமை சிறையில் அடைத்து வைத்து, தரமில்லாத உணவுகளை கொடுப்பது மனித உரிமை மீறல் என கூறி அரசுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

இவ்வழக்கானது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X