Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடால்ப் ஹிட்லரின் நாஜிப் படைகள் பயன்படுத்திய "U boat 534" எனப்படும் குறித்த கப்பலானது, நாஜிப்படைகள் தென் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல பயன்படுத்தியது எனவும், 1945 ஆம் ஆண்டு நாஜிப் படைகள் இதனைப் பயன்படுத்திய போது அது நீரில் மூழ்கியது எனவும் கூறப்படுகிறது.
எனினும் கடந்த 1993 ஆம் ஆண்டு, பிரித்தானியாவில் இக் கப்பல் கண்டெடுக்கப்பட்டது எனவும், இத்தனை ஆண்டுகளாக இது மிகவும் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இதனைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஆய்வாளர்கள் இக்கப்பலை சோதனையிட ஆரம்பித்துள்ள நிலையில், பல திடுக்கிடும் விடயங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஏராளமான அரிய ஆவணங்கள் அக்கப்பலுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், "ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட மீதமிருந்த ஒரே ஒரு குறிப்பு", தனிப்பட்ட கடிதங்கள், புகார் கடிதங்கள், புகைப்படங்கள், எக்கச்சக்கமான பீர் போத்தல்கள் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட பொருட்கள் அதற்குள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் தற்போதும் பயன்படும் வகையில் இருந்துள்ளதாகவும்,ரகசியமாக தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்படும் enigma machine ஒன்றும் அதற்குள் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
44 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
44 minute ago
53 minute ago
54 minute ago