2025 நவம்பர் 05, புதன்கிழமை

95 பேர் பலியானதில் பாதி கிராமம் அழிந்தது

Editorial   / 2019 ஜூன் 12 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலி நாட்டின் மத்திய பகுதியிலுள்ள கிராமமொன்றில் வசித்து வந்த டோகான் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 95 பேர், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என, உள்ளூர் அதிகாரிகளும் பாதுகாப்புத் துறையும் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, தற்காலிகமானது என்றும் இனிவரும் விவரங்களின் அடிப்படையில் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவூண்டு மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர், இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தத் தாக்குதலின் போது, 95 பேர் பலியாகியுள்ளதோடு, உடல்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடல்களை தேடி வருவதாகவும் கூறினார்.

இந்தத் தாக்குதலால், டோகான் கிராமம் கிட்டத்தட்ட முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கிராமத்தில், 300 பேர் வசித்து வருவதாகவும், அனைவரும் ஒரு இடத்துக்கு வரவரழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், சடலங்கள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இது தொடர்புடைய முழுமையான விவரங்கள் அறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் மோஸியாக் இனத்தினருடன் நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாக, இத்தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X