Editorial / 2018 மே 30 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போன, மலேஷியா எயார்லைன்ஸ் விமானமான MH370-ஐக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சியொன்று முடிவுக்கு வந்துள்ளது. தனியாரால் நிதியளிக்கப்பட்டு, ஐக்கிய அமெரிக்காவை மையமாகக் கொண்ட நிறுவனமொன்றால், இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்து சமுத்திரத்தின் தெற்குப் பகுதியிலுள்ள பாரிய பகுதியில், ஆழச் செல்லும் கடல் கருவிகளைக் கொண்டு, 90 நாட்களாக இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால், இத்தேடுதலில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என, அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்தே, இம்முயற்சி முடிவுக்கு வந்தது. மறுபக்கமாக, புதிதாகத் தேடுதல் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளும் திட்டம் தங்களுக்கு இல்லை என, மலேஷிய அரசாங்கம் தெரிவிக்கிறது.
மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு, 239 பேருடன் பயணித்த MH370 விமானம், 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி, மாயமாகியிருந்தது. அவ்விமானத்துக்கு என்ன நடந்தது என்பது, இன்னமும் மர்மமாகவே உள்ளது.
இவ்விமானத்தின் சிதைவுகள் சில, மடகாஸ்கருக்கு அருகில் வரை கிடைத்துள்ள போதிலும், விமானத்தின் பிரதான உடல், இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல், பயணித்தவர்களின் சடலங்களோ அல்லது சிதைவுகளோ, இதுவரை மீட்கப்பட்டிருக்கவில்லை.
இவ்விமானத்தைத் தேடி, அவுஸ்திரேலியா, மலேஷியா, சீனா ஆகிய 3 நாடுகளும் இணைந்து மேற்கொண்ட உத்தியோகபூர்வமான தேடுதல், கடந்தாண்டு ஜனவரியுடன் முடிவுக்கு வந்திருந்தது.
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago