2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தோட்டப்பகுதி விளையாட்டு மைதானங்களை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவை கொட்டியாக்கலைத் தோட்ட பொது விளையாட்டு மைதானத்தினை உரியவகையில் செப்பனிட்டுத்தருவதற்குப் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுத்தேர்தல் இடம்பெற்ற காலத்தில் இந்த மைதானத்தினைச் செப்பனிடுவதற்கு தொழிற்சங்கமொன்று முன்வந்ததாகவும் தேர்தலுக்குப் பின்பு இந்த விளையாட்டு மைதானம் செப்பனிடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் கொட்டியாக்கலைத் தோட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் டிக்கோயா வனராஜா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள விளையாட்டு மைதானமொன்றினையும் பொதுத்தேர்தல் காலத்தில் செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேர்தலுக்குப்பிறகு இந்தச்செப்பனிடும் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .