2021 ஜூலை 31, சனிக்கிழமை

அராலி சரஸ்வதி உதைபந்தாட்டச் சம்பியன்

Super User   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(நவம்)

சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம் பெற்ற 13 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் சங்கானை கல்விக் கோட்டச் சம்பியனானது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயமும் மோதிக்கொண்டன.

இரு அணிகளும் போட்டி முடிவடையும்வரை சளைக்காது போராடிய போதிலும் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
 
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கடும் முயற்சி எடுத்தி போதிலும் இறுதி நேரத்தில் சரஸ்வதி மகா வித்தியாலயம் தனக்கு கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றைக் கோலாக்கி முன்னிலையில் நின்ற வேளையில் முதல் பாதி ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தமது முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி மோதிக்கொண்ட போதிலும் மீண்டும் ஒரு கோலை சரஸ்வதி மகா வித்தியாலயம் பெற்றுக் கொண்டது.

போட்டி சூடு பிடித்துக்கொண்ட நிலையில் தொடர்ந்து இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறமுடியாத நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது.

ஆட்ட நிறைவில் சரஸ்வதி மகா வித்தியாலயம் 02 : 00 என்ற கோல் கணக்கில் விக்ரோறியாக் கல்லூரியை வெற்றி பெற்றுச் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. மூன்றாம் இடத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பெற்றுக் கொண்டது.

altalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .