2021 ஜூலை 26, திங்கட்கிழமை

ஹஜ் பெருநாளை முன்னிட்டு கல்முனையில் கால்ப்பந்தாட்ட போட்டி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

ஹஜ் பெருநாளை முன்னிட்டு கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கால்ப்பந்தாட்டப் போட்டி கல்முனை ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது.

விளையாட்டின் ஊடாக இன உறவை வழுவூட்டுவதை நோக்கமாக கொண்ட இந்த கால்ப்பந்தாட்டப் போட்டியில் 'மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டுக்கழக' கால்ப்பந்தாட்ட அணியும் 'கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக' கால்ப்பந்தாட்ட அணியும் போட்டியிட்டபோதும், கல்முனை சனிமௌனட் அணியினர் மட்டக்களப்பு கோட்டமுனை அணியினரை 4க்கு 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டினர்.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இலங்கை பொலிஸ் உதைப்பந்தாட்ட அணியின் தலைவரும், பொலிஸ் தலைமை காரியாலய- உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.எம். நவாஸ், கௌரவ அதிதியாக கல்முனை ஹட்டன் நெஷனல் வங்கியின் முகாமையாளர் ஏ. எல்.அன்வர்டீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .