2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழகம் கால்ப்பந்தாட்ட சம்பியன்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேசமட்ட கால்ப்பந்தாட்ட சம்பியனாக மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கல்முனை பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட கால்ப்பந்தாட்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகர பொது மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் மோதியது.

இதில் பூச்சியத்திற்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி 2011ஆம் ஆண்டு கல்முனை பிரதேசமட்ட உதைப்பந்தாட்ட சம்பியனாக ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .