2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

மெய்வன்மைப் போட்டியில் இணுவில் இந்து விளையாட்டுக்கழகத்திற்கு முதலாமிடம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வலிதெற்கு உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை மெய்வன்மைப் போட்டி சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளா தேவி சதீசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விளையாட்டுப் பணிப்பாளர் சி.அண்ணாத்துரையும் சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் ஈ.பி.டி.பி அமைப்பாளர் ஜீவன், உடுவில் பிரதேச அமைப்பாளர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினர்.

இந்தப் போட்டியில் இணுவில் இந்து விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தையும்  மல்லாகம் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றிக்கேடயங்களையும் பெற்றுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X