Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 27 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
5,000 மீற்றர் நெடுந்தூர ஓட்டம், 5,000 மீற்றர் நெடுந்தூர விரைவு நடை ஆகிய போட்டிகளில் முதலிடம்பெற்று தங்கப் பதக்கங்களையும், 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 5,000 மீற்றர் நெடுந்தூர ஓட்டத்தில் நான்காமிடத்தையும் அகிலத்திருநாயகி பெற்றுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு தடகள போட்டியில் உலகளவில் இலங்கைக்கு பெருமைசேர்த்த முல்லைத்தீவு மாவட்ட பெண்மணியினை கௌரவப்படுடுத்தும் நிகழ்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அகிலத்திருநாயகிக்கு மலர்மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு பண்டரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது அகிலத்திருநாயகிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், நினைவுப் படமும் வழங்கி வைக்கப்பபட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கொடையாளரொருவரால் அகிலத்திருநாயகிக்கு 25,000 ரூபாய் பணப்பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago