2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று விளையாட்டு மைதானம் புனரமைப்பு

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்லம்

நீண்ட காலமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்ற அக்கரைப்பற்று விளையாட்டு மைதானம் அக்கரைப்பற்று மாநகர சபையினால் துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸின் பணிப்புரைக்கு அமைவாக, அவரது வழிகாட்டலில் மாநகர சபை நிதியின் மூலம் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இம்மைதானத்தின் சில பகுதிகளில் பெருமளவு குப்பைகள் கொட்டப்பட்டு காணப்பட்டதாலும் மைதான சீரின்மை காரணமாகவும் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் இடையூறாக அமைந்திருந்த நிலையில், விளையாட்டுக் கழகங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று மாநகரசபை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் இங்குள்ள குப்பைகள் யாவும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளதுடன் மைதானத்தை செப்பனிட்டு, புனரமைக்கும பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக இந்த விளையாட்டு மைதானத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளரின் இத்துரித நடவடிக்கைக்காக ஷோ சிற்றி கழகம் உட்பட அக்கரைப்பற்றிலுள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .