Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அக்கரைப்பற்று கால்பந்தாட்ட லீக்கினால் நடத்தப்பட்ட மர்ஹும் அலிஉதுமான் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் கால்பந்தாட்ட அணி வெற்றிபெற்றுச் சம்பியனானது.
அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடத்துப்பட்டு வந்த இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, சனிக்கிழமையன்று (08) மாலை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பலம் பொருந்திய 16 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு, அக்கரைப்பற்று ஏஸ் அணியும் அட்டாளைச்சேனை சோபர் அணியும் தெரிவாகின.
பலம் பொருந்திய இவ்விரு அணிகளுக்குமிடையில் சனிக்கிழமை(08) இடம்பெற்ற இறுதிப் போட்டிச் சமரில், இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்தில் எந்தவிதமான கோல்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
இறுதியில் வழங்கப்பட்ட பெனால்டி முறையில் 7-6 என்ற கோல் கணக்கில் அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றிபெற்று, சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
இறுதிநாள் நிகழ்வில், விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு, பரிசில்களை வழங்கி வைத்தனர்.
51 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
5 hours ago