Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
இலங்கையின் 42ஆவது விளையாட்டுப் போட்டிகளில், கோலூன்றிப் பாய்தலில் 3.41 மீற்றர் உயரம் தாண்டி, புதிய சாதனை படைத்த தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தாவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்தினார்.
அனித்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியொன்றில் கலந்துகொண்டு 3.35 மீற்றர் உயரத்தைத் தாண்டி சாதனை படைத்திருந்தார். இவரின் சாதனை, சில மாதங்களுக்குள் இராணுவ வீராங்கனை கசிந்தா நிலுக்சியினால் 3.40 மீற்றர் உயரத்தை தாண்டி முறியடிக்கப்பட்டது. மீண்டும், அந்தச் சாதனையை அனித்தா முறியடித்துள்ளார். இந்தச் சாதனையை முதலமைச்சர் பாராட்டினார்.
“மகாஜனாக் கல்லூரி என்பது போரின் பின்னர் புத்துயிர் பெற்ற ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட கல்லூரி. இங்கு எதுவித வளங்களும் கிடையாது. போரின் வடுக்களாக கட்டிட இடிபாடுகளும், சீமெந்துக் கற்களும், ஓட்டுத் துண்டுகளும் பரவிக் கிடக்கின்ற மைதானமே இவர்களின் மூலதனம். பயிற்சிக்கான உபகரணங்கள் இல்லை. விளையாட்டு மைதானங்கள் சீராக இல்லை. இந்நிலையிலும் அனித்தாவின் கடின உழைப்பும் விடா முயற்சியும் அவரை சாதனையாளராக மாற்றியிருக்கின்றது’ என தனது வாழ்த்தில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
51 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
5 hours ago