Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவர்கள் நடாத்திய, மட்டங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி, இம்முறை, அமிழ்-கரோ ஞாபகார்த்த போட்டியாக கடந்த இரு வாரமாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. மட்டம் நான்கு மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட இப்போட்டியானது, ஆண்களுக்கான கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கரம், பெண்களுக்கான துடுப்பாட்டம், கரம் போன்ற விளையாட்டுக்களை உள்ளடக்கியிருந்தது.
மட்டம் நான்கு ‘ஏ’, மட்டம் இரண்டு, வெளியேறிய மாணவர்கள் அணி ஆகியன ஒரு குழுவாகவும் மட்டம் நான்கு ‘பி’, மட்டம் 1, மட்டம் 3 ஆகிய ஒரு ஆகியன ஒரு குழுவாகவும் ஆறு அணிகள் போட்டியிட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் போட்டியிட்டன. இதில், ஒவ்வொரு குழுக்களுக்கிடையேயும் லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்று முதலிரண்டு இடம்பெற்ற அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றனர்.
முதலாவது அரையிறுதிப் போட்டியில், முதலாவது குழுவில் முதலிடம் பெற்ற மட்டம் நான்கு ‘ஏ’ அணியும் இரண்டாவது குழுவில் இரண்டாமிடம் பெற்ற மட்டம் நான்கு ‘பி’ அணியும் மோதவேண்டி இருந்தது. இரண்டு அணிகளும் மட்டம் நான்கு அணிகள் என்பதால், அவை தமக்கிடையே விளையாடாமலே, மட்டம் நான்கு ‘ஏ’ அணியை இறுதிப் போட்டிக்கு அனுப்பினர். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இரண்டாவது குழுவில் முதலிடம் பெற்ற மட்டம் ஒன்று அணியும் முதலாவது குழுவில் இரண்டாமிடம் பெற்ற மட்டம் இரண்டு அணியும் மோதி, மட்டம் ஒன்று அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், பெனால்டி முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில், 3-0 என்ற ரீதியில், மட்டம் நான்கு ‘ஏ’ அணியைத் தோற்கடித்து, மட்டம் ஒன்று சம்பியனானது. தொடரின் சிறந்த வீரராக மட்டம் ஒன்றை சேர்ந்த தெய்வேந்திரன் அனஸ்ராஜ் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடரில் அதிக கோல்களை அடித்து, தங்கப் பாதணி விருதினை மட்டம் ஒன்றை சேர்ந்த ஆனந்தமூர்த்தி வைகரன் பெற்றுக்கொண்டதுடன், தொடரின் சிறந்த கோல்காப்பாளராக, தங்கப் பந்து விருதினை மட்டம் இரண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு கஜாகரன் தெரிவு செய்யப்பட்டார்.
ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்திலும், மட்டம் நான்கு ‘ஏ’, மட்டம் இரண்டு, வெளியேறிய மாணவர்கள் அணி ஆகியன ஒரு குழுவாகவும் மட்டம் நான்கு ‘பி’, மட்டம் 1, மட்டம் 3 ஆகிய ஒரு ஆகியன ஒரு குழுவாகவும் ஆறு அணிகள் போட்டியிட்டன. இதில், ஒவ்வொரு குழுக்களுக்கிடையேயும் லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்று முதலிரண்டு இடம்பெற்ற அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றனர்.
முதலாவது அரையிறுதிப் போட்டியில், முதலாவது குழுவில் முதலிடம் பெற்ற மட்டம் நான்கு ‘ஏ’ அணியும் இரண்டாவது குழுவில் இரண்டாமிடம் பெற்ற மட்டம் ஒன்று மாணவர்கள் அணியும் மோதி, மட்டம்நான்கு ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இரண்டாவது குழுவில் முதலிடம் பெற்ற மட்டம் நான்கு ‘பி’ அணியும் முதலாவது குழுவில் இரண்டாமிடம் பெற்ற வெளியேறிய மாணவர்கள் அணியும் மோதி, வெளியேறிய மாணவர்கள் அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில், மட்டம் நான்கு ‘ஏ’ அணியும் வெளியேறிய அணியும் மாறிமாறி முதலிரண்டு செட்களைக் கைப்பற்றிய நிலையில், தீர்மானமிக்க மூன்றாவது செட்டைக் கைப்பற்றிய வெளியேறிய மாணவர்கள் அணி சம்பியனாகியது. தொடர் நாயகனாக, வெளியேறிய மாணவர்கள் அணியைச் சேர்ந்த விசாகன் தெரிவு செய்யப்பட்டார்.
அதிக அணிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற கரம் போட்டிகளில் ஆண்கள் பிரிவில், மட்டம் ஒன்றைச் சேர்ந்த தெய்வேந்திரன் அனஸ்ராஜ், குளோஜிதன் ஆகியோரை உள்ளடக்கிய அணியை, மட்டம் நான்கைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மேனன், பாலகிருஷ்ணன் விஜேந்திரன் ஆகியோர் அணி தோற்கடித்து சம்பியனாகியதுடன். பெண்களுக்கான கரம் போட்டியில், மட்டம் நான்கைச் சேர்ந்த நிலாயினி, திவியாங்கி ஆகியோரை உள்ளடக்கிய அணியை, மட்டம் ஒன்றைச் சேர்ந்த ஜீசுதாஸ் மேரி கீர்த்திகா, காண்டீபன் கிரிசாத்தியா ஆகியோரை உள்ளடக்கிய அணி வென்று சம்பியனாகியது.
பெண்களுக்கான கிரிக்கெட்டில், மட்டம் நான்கு அணி, ஏனைய மட்ட வீராங்கனைகளை ஒன்றிணைத்த அணியை வென்று சம்பியனாகியது. போட்டியின் சிறந்த வீராங்கனையாக மட்டம் நான்கைச் சேர்ந்த திவியாங்கி தெரிவுசெய்யப்பட்டார்.
ஆண்களுக்கான கிரிக்கெட்டில், மட்டம் ஒன்று, வெளியேறிய மாணவர்கள் அணி ‘பி’, மட்டம் நான்கு ‘ஏ’ ஆகிய அணிகள் ஒரு குழுவாகவும் வெளியேறிய மாணவர்கள் அணி ‘ஏ’, மட்டம் மூன்று, மட்டம் நான்கு ‘பி’ ஆகிய அணிகள் இன்னொரு குழுவாகவும் மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு குழுவுக்கிடையேயும் லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்று, முதலிரண்டு இடம்பெற்ற அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகின.
முதலாவது அரையிறுதிப் போட்டியில், முதலாவது குழுவில் முதலிடம் பெற்ற மட்டம் நான்கு ‘ஏ’ அணியும் இரண்டாவது குழுவில் இரண்டாமிடம் பெற்ற வெளியேறிய மாணவர்கள் ‘ஏ’ அணியும் மோதி, வெளியேறிய மாணவர்கள் ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இரண்டாவது குழுவில் முதலிடம் பெற்ற மட்டம் மூன்று அணியும் முதலாவது குழுவில் இரண்டாமிடம் பெற்ற வெளியேறிய மாணவர்கள் ‘பி’ அணியும் மோதி, மட்டம் மூன்று மாணவர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில், வெளியேறிய மாணவர்கள் ‘ஏ’ அணியைத் தோற்கடித்து, மட்டம் மூன்று அணி சம்பியனாகியது. தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர், தொடரின் சிறப்பாட்டக்காரர், சிறந்த அதிரடி வீரர் விருதுகளை, மட்டம் மூன்றைசச் சேர்ந்த புஸ்பராசா தாஸ்மோகன் பெற்றுக்கொண்டார். சிறந்த பந்து வீச்சாளராக மட்டம் மூன்றைச் சேர்ந்த சண்முகநாதன் நிஷாந்தனும் சிறந்த களத்தடுப்பாளராக மட்டம் நான்கைச் சேர்ந்த திரவியநாதன் ஹரிஷாந்தும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago