குணசேகரன் சுரேன் / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமது நூற்றாண்டு விழாவையொட்டி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.
அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் விலகல் முறையில் இடம்பெற்றுவரும் குறித்த தொடரில், நேற்று இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் நவிண்டில் கலைமதி விலையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 3-2 என்ற ரீதியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு றோயல் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றிருந்தது. குறித்த போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்ததாலேயே பெனால்டி மூலம் அரையிறுதிக்குச் செல்லும் அணி தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் அச்செழு வளர்மதி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகமும் வியாழக்கிழமை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் மெலிஞ்சிமுனை இருதயராசா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்ற குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகமும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago