Freelancer / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தை வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பிளையிங் ஹோர்ஸ் தகுதி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 138 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிளையிங் ஹோர்ஸ் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பிளையிங் ஹோர்ஸின் எஸ்.எம்.எம். றம்ஸீன் தெரிவானார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago