குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 05 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தை ஐந்து விக்கெட்டுகளால் வென்று, அரையிறுதிப் போட்டிக்குள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி நுழைந்தது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 50 ஓவர்களைக் கொண்டதாக நடைபெற்றுவரும் இத்தொடரின் காலிறுதிப் போட்டியொன்று, பேராதனைப் பல்கலைக்கழக மைதானத்தில், நேற்று (04) நடைபெற்றது. அன்று பெய்த மழை காரணமாக, போட்டி, 33 ஓவர்களைக் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு இது இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மொறட்டுவை அணி, 33 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், வகன்யா 26 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், குருகலசூரிய, லோகதீஸ்வரர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 125 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி, 28.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கல்கோவன் 44, துவாரகசீலன் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றனர்.
அரையிறுதிப் போட்டியில், ராஜரட்டை பல்கலைக்கழகத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மோதவுள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago