Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
குணசேகரன் சுரேன் / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பாடசாலைகளின் 15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்கு யாழ். மத்திய கல்லூரி தகுதிபெற்றுள்ளது.
தமது மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், யாழ். இந்துக் கல்லூரியை வென்றே அரையிறுதிப் போட்டிக்கு மத்திய கல்லூரி தகுதிபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தமது முதலாவது மத்திய கல்லூரி, 9 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றபோது, தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், எம். சஞ்சயன் 63, எஸ். நிபேஸ் 61, வி. ஹவிதர்சன் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹஜநாத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 59 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், கஜன் 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், கௌதம், சஞ்சயன் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மத்திய கல்லூரி, போட்டி முடிவுக்கு வருகையில், 4 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், சஞ்சயன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டி விதிமுறையின் படி, முதல் இனிங்ஸில் முன்னிலை பெறும் அணி வெற்றிபெற்ற அணியாக கொள்ளப்படும் எனும் அடிப்படையில் மத்திய கல்லூரி வெற்றிபெற்றது.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago