Shanmugan Murugavel / 2022 ஜூலை 13 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற கிரிக்கெட் திருவிழாவான எப்.எஸ்.கே. மியன்டாட் பிறீமியர் லீக் கடினபந்து கிரிக்கெட் தொடரானது மிகக் கோலாகலமாக சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
மியன்டாட் விளையாட்டுக் கழகத்தினரை ஒன்றிணைத்து சாந்தம் சலஞ்சர்ஸ், மருதூர் வொரியர்ஸ், வொலி லயன்ஸ், மாளிகா யுனைட்டெட் ஆகிய நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு குறித்த போட்டிகள் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.
இப்போட்டிகள் யாவும் சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. மியன்டாட் கழகத்தின் 80 கடினபந்து விளையாட்டு வீரர்கள் குறித்த போட்டியில் மொத்தமாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025