Freelancer / 2023 நவம்பர் 29 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட பிரிவு மூன்று கடினபந்து கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி தகுதி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மட்டக்களப்பு புனித மைக்கல் தேசிய கல்லூரியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இரண்டாவது சுற்றுக்கு கல்முனை சாஹிரா தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித மைக்கல் கல்லூரி 27 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 92 ஒட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 93 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சாஹிரா 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026