Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 23 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

புளு நேவீஸ் சவால் கிண்ண இறுதிப் போட்டிக்கு கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் தெரிவானது.
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிளைங்ஹொர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே இறுதிப் போட்டிக்கு லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிளைங்ஹோர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 118 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லெஜன்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக சப்ராஸ் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .