2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

“இலங்கை தடுமாறியது”

Freelancer   / 2023 நவம்பர் 14 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை தடுமாறியதற்கு இலங்கையிலுள்ள ஆடுகளங்களே காரணமென இலங்கையணியின் பயிற்சி ஆலோசகர் மகேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஆடுகளங்களானவை துடுப்பாட்டவீரர்கள், அவர்களின் உச்ச போர்மை உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் அடைவதை அனுமதித்திருக்காததோடு, எவ்வாறு கடுமையாகப் பணியாற்ற வேண்டுமென சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கற்பித்திருக்கவில்லையென ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐந்து சந்தர்ப்பங்களில் ஒரு தடவை மாத்திரமே 280 ஓட்டங்களை இலங்கை தாண்டியமை குறிப்பிடத்தக்கது என்பதுடன், இலங்கையின் பிரதான சுழற்பந்துவீச்சாளர் மகேஷ் தீக்‌ஷன 6 விக்கெட்டுகளையே கைப்பற்றியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X