2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உலக குத்துச் சண்டையில் கண்டி மாணவர்கள்

மொஹொமட் ஆஸிக்   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக வெற்றிக் கிண்ண குத்துச் சண்டைப் போட்டியில், கண்டி, பிலிமத்தலாவை தீராநந்த மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் பங்குபற்றவுள்ளனர்.

இக்குத்துச் சண்டைப் போட்டிக்கு, இலங்கை சார்பாக தீராநந்த மகா வித்தியாலய மாணவர்கள காவிந்த சேத்தயி ஏக்கநாயக்கா தெரிவாகியுள்ளார். இவர் பங்கு கொள்ளும் போட்டி சீனா தாய்பேயில் இடம் பெறும்.

அதே பாடசாலையைச் சேர்ந்த காவிந்த சஞ்நே பண்டார ஹங்கேரியில், இம்மாதம் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறும் போட்டியில் பங்குபற்றவுள்ளார். 

தாய்லந்தில் இடம் பெற்ற ஆசிய இளைஞர் குத்துச் சண்டைப் போட்டியில் காட்டிய திறமையின் அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா அண்மையில் அழைத்து நல்லாசிகள் வழங்கினார். அதன்போது அவர்களின் வித்தியாலய அதிபர் பி.ஜி.ஜி. பண்டாரவும் பயிற்சியாளர் சனிலும் பிரசன்னமாகியிருந்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X