Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 25 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண ரீதியாக, யாழ்பாணம், வலிகாமம், தீவகம், வடமராட்சி, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் கால்பந்தாட்ட லீக்குகளின் அனுசரணையோடு வடக்கின் சமர் கால்பந்தாட்டத் தொடரை ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடாத்தி வருகிறது.
இதில், ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்துக்கும் மயிலங்காடு பைவ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில், றோயல் விளையாட்டுக் கழகம், 6-1 என்ற கோல் கணக்கில் கோல் மழை புரிந்து வெற்றி பெற்றது. இதில், றோயலின் நட்சத்திர வீரர் கஜகோபன், ஹட்ரிக் கோல் உள்ளடங்கலாக நான்கு கோல்களைப் பெற்றார்.
இதேவேளை, இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில், விக்கினேஸ்வரா, ஞானமுருகன், வளர்மதி, மெலிஞ்சிமுனை இருதயராஜா, றேஞ்சர்ஸ், திருக்குமரன், பைவ் ஸ்டார், யங்கம்பன்ஸ், நாமகள், விண்மீன், செந்நீக்லஸ், ஊரெழு பாரதி, ஹென்றிஸ், கலைவாணி, ஆனை யூனியன் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025