2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஓட்டமாவடியில் விளையாட்டுக் கழகங்களை வலுவூட்டும் நிகழ்வு

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழங்களை வலுவூட்டும் நிகழ்வானது ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் அண்மையில்.  இடம்பெற்றது.

உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ. இன்ஷாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம். இம்தியாஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற  குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட, பதிவுக்காக காத்திருக்கும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது பதிவு செய்யப்பட்ட கழகங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், பிரதேசத்திலுள்ள விளையாட்டுக்கழகங்களை இணைத்து ஒன்றுபட்ட அமைப்பொன்றை முன்கொண்டு செல்வதற்கான உடன்பாடும் எட்டப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .