2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கரப்பந்தாட்ட போட்டியில் ‘ஏபர்நெட் லங்கா’ சாம்பியன்

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அகில இலங்கை வர்த்தக நிறுவனங்களுக்கிடையில் தேசிய மட்ட ரீதியில் கொழும்பு மஹரகம தேசிய கரப்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில்  கடந்த (29) இடம்பெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்று போட்டியில்  உடப்புஸ்ஸலாவை ‘ஏபர்நெட் லங்கா நிறுவனம்’  முதலிடம் பெற்றுள்ளது.

இந்த வெற்றியினை கொண்டாடும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் தலைசிறந்த கரப்பந்தாட்ட அணிகளான கந்தப்பளை பார்க் நைட்ரைடர் மற்றும் யங்ஸ்டார் ஆகிய கரப்பந்தாட்ட அணிவீரர்கள் உட்பட தோட்ட பொதுமக்கள் இணைந்து விசேட  நிகழ்வு ஒன்றை நடத்தினர்.

கந்தப்பளை பார்க்  தோட்ட முத்துமாரியம்மன் ஆலய திடலில் புதன்கிழமை (08)  காலை இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில் "ஏபர்நெட்"லங்கா தொழிற்சாலை முகாமையாளர் என்.எச்.சுதத்,கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோகில ஆரியதாஸ,நுவரெலியா பிரதேச சபை,முன்னால் தலைவர் வேலு யோகராஜ், தேசிய கரப்பந்தாட்ட சிரேஷ்ட  வீரர் எல்.சி.ஏக்கநாயக்கா,  நுவரெலியா மாவட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கான சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் குலசிரி சமரசிங்க,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X