Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சவீவபுரம் சோஸியல் கரப்பந்தாட்ட மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற அணிக்கு 04 பேரைக் கொண்ட கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில், புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்த அணியான சோஸியல் கரப்பந்தாட்ட அணி சம்பியனாகியுள்ளது.
புத்தளம் ரியாஜ் மரத்தளவாட நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.எம். ரிபாய், இத்தொடரை ஏற்பாடு செய்திருந்தார். விலகல் அடிப்படையிலான இந்த சுற்றுப்போட்டியில், மொத்தமாக 12 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில், சோஸியல் கரப்பந்தாட்ட அணியுடன் புத்தளம் "நெருப்புடா" அணி எதிர்த்தாடியது.
03 - 02 போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்ட இந்த இறுதி போட்டியில், 02 போட்டிகளை சோஸியல் கரப்பந்தாட்ட அணி பெற்றுக்கொண்டு வெற்றிபெற்றுச் சம்பியனாகியதோடு, இரண்டாம் இடத்தை, "நெருப்புடா" அணி பெற்றுக்கொண்டது.
இதன் பரிசளிப்பு நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஏ.எம். அஸ்கின், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம். நஸ்மீர், புத்தளம் மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் முஹம்மது அலி, போட்டி ஏற்பாட்டாளர் ஜே.எம். ரிபாய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் ரொக்கப்பணமாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம்பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 05ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டன.
போட்டிக்கு நடுவராக புத்தளம் நகரில் நீண்ட காலம் சகல போட்டிகளுக்கும் நடுவராகக் கடமையாற்றும் ஏ.எச். உமர் பாச்சா கடமையாற்றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago