Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், நடராஜன் ஹரன்
ஆலையடிவேம்பு பிரதேச வீரர்களுக்கான நான்கு நாள் சர்வதேச கராத்தே பயிற்சிப்பட்டறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
இலங்கைக்கான ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கத் தலைவி கே.சஷித்ரா லக்மினி ராமச்சந்திரனின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஜே.கே.எம்.ஓ. பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி தலைமைமையில் இப்பயிற்சிப்பட்டறை நடைபெறுகின்றது.
இப்பயிற்சிப் பட்டறையின் உத்தியோகபூர்வத் தொடக்க விழாவுக்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், கௌரவ அதிதியாக திருக்கோவில் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளனும் கலந்து சிறப்பித்தனர்.

5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025