2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காலிறுதியில் இளவாலை யங்ஹென்றிஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தி வரும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இளவாலை யங்ஹென்றிஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் விலகல் முறையில் இடம்பெற்றுவரும் குறித்த தொடரின் நேற்று இடம்பெற்ற ரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில் யாழ். பல்கலைக்கழக அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே யங்ஹென்றிஸ் அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

குறித்த போட்டியின் நாயகனாக யங்ஹென்றிஸ் அணியின் டிலக்ஸன் தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற அச்செழு வளர்மதி, நாவாந்துறை சென். மேரிஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைய, காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் அணியை தேர்வு செய்வதற்காக இடம்பெற்ற பெனால்டியில், 4-3 என்ற ரீதியில் வெற்றிபெற்ற வளர்மதி அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற முதற் சுற்றுப் போட்டிகளில், நாவற்குழி அன்னை, ஆனைக்கோட்டை யூனியன் அணிகளை முறையே வென்ற கிளிநொச்சி இரணைமாதாநகர் சென். மேரிஸ், கிளிநொச்சி உருத்திரபுரம் அணிகள் இரண்டாவது சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .