2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் அணிக்கு சீருடை, விளையாட்டு உபகரணங்கள்

Shanmugan Murugavel   / 2021 செப்டெம்பர் 24 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எல்.எஸ். டீன்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆஷாத் எம் ஹனீபாவால் வைத்தியசாலை நலன்புரி சங்கத்திடம் வழங்கிவைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணராக கடமையாற்றிச் சென்ற டொக்டர் எம். அஹமட் பரீட்டின் அனுசரணையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்துக்கு இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில், நலன்புரிச் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அப்துல் றசாக் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X