Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ. சக்தி
கிழக்கு மாகாணத்தில் இளைஞர்களுக்கு சர்வதேச நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் பயிற்சி மட்டக்களப்பு வெபர் நீச்சல் தடாகத்தில் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பையின் ஏற்பாட்டில் அண்மையில் இந்நிகழ்வு நடைபெற்றது. விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சோல்வ் பவுண்டேசன் அனுசரணையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பாசறையின் பிரதான பயிற்றுநராக அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தின் பயிற்றுநர் பஞ்சரத்தினம் தம்பு இதன்போது கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நீச்சல் பயிற்றுவிப்பாளர்கள், உயிர்க்காப்பு நீச்சல் கற்கை நெறியை நிறைவு செய்தவர்கள், நீச்சல் வீரர்கள் போன்றோருக்கு நீச்சல் தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் தொடர்பாக இதன் போது வளவாளரால் பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சியில் கலந்து கொண்ட நீச்சல் வீரர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
சிறந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவதற்கு இப்பயிற்சிகள் உதவுவதுடன் எதிர் காலத்திலும் இவ்வாறான பயிற்சிகள் இடம்பெறவுள்ளதான விளையாட்டு உத்தியோகத்தர்கள் இதன்போது தெரிவித்தனர்.
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago