R.Tharaniya / 2025 மே 25 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான நடைபெற்ற கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அபுல் ஹஸன், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நடைபெற்று முடிந்த நிகழ்ச்சிகளின் படி புள்ளிகளின் அடிப்படையில் செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலயம் முதலிடம் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அத்துடன், இரண்டாம் இடத்தை மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயமும், மூன்றாம் இடத்தை தியாவட்டவான் அறபா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டது.
எச்.எம்.எம்.பர்ஸான்




54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago