2025 நவம்பர் 19, புதன்கிழமை

கிண்ணத்தைக் கைப்பற்றியது சி.ஆர் அன்ட் எஃப்.சி

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹவலொக் பார்க்கில் புதன்கிழமை (02) இடம்பெற்ற நூற்றாண்டுக் கிண்ணமான ஆதர் றேமொன்ட் கிண்ணத்தை 26-8 என்ற புள்ளிகள் கணக்கில் ஹவலொக் விளையாட்டுக் கழகத்தைத் தோற்கடித்து, சி.ஆர் அன்ட் எஃப்.சி கைப்பற்றியது. 

போட்டியின் ஆரம்பத்தில் ஹவலொக் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் மத்திய கள வீரருமான சதுன் ஹேரத்தே முயற்சியொன்றை மேற்கொண்டு புள்ளிகள் பட்டியலை ஆரம்பித்து வைத்தார். இருந்தபோதும் சி.ஆர் அன்ட் எஃப்.சி இன் சஷன் மொஹமட் முயற்சியொன்றை மேற்கொண்டு, தொடர்ந்து அதை கோலாக்க அவ்வணி 7-5 என்று முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இடைவேளைக்கு சற்று முன் தரிந்தவிடமிருந்து பந்தை பெற்ற மேகலங்க பிரமோதா 50 மீற்றர் ஓடி முயற்சியை பெற தரிந்து ரத்வத்த அதனை கோலாக்க இடைவேளை முடிவில் 14-5 என்ற புள்ளிகள் கணக்கில் சி.ஆர் அன்ட் எஃப்.சி முன்னிலை வகித்தது. 

இடைவேளையை தொடர்ந்து ஹவலொக் விளையாட்டுக் கழகத்தின் டுலாஜ் பெரேரா இலகுவாக கோலாக்க அவ்வணி 8 புள்ளிகளை அடைந்தது. தொடர்ந்து உடனே சி.ஆர் அன்ட் எஃப்.சி இன் தரிந்து ரத்வத்த, ஹவலொக் அணியின் தடைகளை தகர்த்து மேகலங்க பிரமோதாவிடம் பந்தை பரிமாற, அதை வெற்றிகரமான முயற்சியாக்கி, தரிந்து ரத்வத்தையால் கோல் பெறப்பட 21-8 என்ற புள்ளி அடிப்படையில் சி.ஆர் அன்ட் எஃப்.சி முன்னிலை பெற்றது. இறுதியில் அவ்வணியின் முன்கள வீரர் நிபுன தவிந்த முயற்சியொன்றை பெற அவ்வணி 26-8 என புள்ளி அடிப்படையில் வெற்றிபெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X