Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய, பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கிடையிலான உறவினை வளர்க்கும் முகமாக, நாடளாவிய ரீதியாக கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
யாழ். பொலிஸ் நிலைய ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில், அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டப் போட்டிகள், செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றன. ஒவ்வோர் அணியிலும், 4 பொலிஸாரும் 3 பொதுமக்களும் இடம்பெற்றிருந்தனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட 9 பொலிஸ் நிலையங்கள் இதில் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில், கொடிகாமம் அணியை எதிர்த்து ஊர்காவற்றுறை பொலிஸ் அணி மோதிக்கொண்டது. இதில் ஊர்காவற்றுறை பொலிஸ் அணி, 3-1 என்ற கோல்கள் அடிப்படையில் சம்பியனாகியது.
சம்பியனாகிய அணிக்கும் சிறந்த வீரர்களுக்குமான கேடயங்களை, பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜி.எஸ் ஹேவவிதாண வழங்கிவைத்தார்.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago