Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
இலங்கை அரச ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் அரச ஊழியர்களின் ஆண்கள் பெண்கள் கலப்பு அணிகளுக்கிடையே நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு விளையாட்டு திணைக்கள அணி சம்பியனாகியது.
கொழும்பு டொறிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். அரச ஊழியர்கள் கலப்பு அணியும் கொழும்பு விளையாட்டுத் திணைக்கள் அணியும் மோதிக்கொண்டன.
முதற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. இரண்டாம் பாதியாட்டம் மிகுந்த போட்டி நிறைந்ததாகக் காணப்பட்டது. இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகள் பெற்றன. இரண்டாம் பாதியை கொழும்பு அணி 11:10 புள்ளிகள் அடிப்படையில் வென்றது.
மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு திணைக்கள அணி 14:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் சம்பியனாகியது.
5 hours ago
8 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
18 Nov 2025