2025 மே 15, வியாழக்கிழமை

சமநிலையில் முடிந்த போட்டி

Freelancer   / 2023 நவம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்ராஹிம்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை
பாடசாலைகளுக்கிடையிலான 13 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கடினபந்து கிரிக்கெட்
தொடரில், கண்டி பொறமதுல்ல மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மடவல
அல் மதீனா தேசிய கல்லூரிக்கும், கண்டி திருத்துவக் கல்லூரிக்குமிடையிலான போட்டியானது
சீரற்ற காலநிலையால் வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மடவல அல் மதீனா தேசிய கல்லூரி 50 ஓவர்களில் 9
விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸஸாட் 34 நான்கு
ஓட்டங்கள் உள்ளடங்கலாக 148 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பதிலுக்கு 223 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கண்டி திருத்துவக்
கல்லூரி 29 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சீரற்ற
காலநிலை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டு  வெற்றி தோல்வியின்றி போட்டி நிறைவுக்கு
வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .