2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

சம்பியனான புத்தளம் போல்டன்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 12 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

நுரைச்சோலை வேல்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த அணிக்கு தலா ஒன்பது பேரைக் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில் புத்தளம் போல்டன் அணியினர் சம்பியனாகியுள்ளனர்.

கல்பிட்டி பள்ளிவாசல்துறை அணியை இறுதிப் போட்டியில் வென்றே போல்டன் சம்பியனாகியிருந்தது.

12 அணிகள் பங்குபற்றிய இத்தொடரானது, நுரைச்சோலை பாடசாலை மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது

இறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பள்ளிவாசல்துறையை வென்று போல்டன் சம்பியனாகியிருந்தது. போல்டன் சார்பாக, எம்.எஸ். இஹ்சான், எம்.என். அர்க்கமும், பள்ளிவாசல்துறைக்காக எம். சம்ரீனும் கோல்களைப் பெற்றனர்.

இறுதிப் போட்டியின் நாயகனாக இஹ்சான் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .