சிவாணி ஸ்ரீ / 2017 ஜூன் 19 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}




கேகாலை மாவட்ட மேசைப்பந்துச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான மேசைப்பந்துப் போட்டி, கேகாலை வித்தியாலயத்தின் மேசைப்பந்து விளையாட்டரங்கில், நேற்று (18) இடம்பெற்றது.
மேற்படி 10, 12, 15, 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான மேசைப்பந்துப் போட்டியில், ஆண்களில், கண்டி கிங்ஸ்வூட் வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்றதோடு, பெண்களில், கண்டி ஹில்வூட் வித்தியாலயம் வெற்றி பெற்றது.
மேற்கூறப்பட்ட மேசைப்பந்துப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், அகில இலங்கை மேசைப்பந்துச் சங்கத்தின் தலைவர் கனக ஹேரத், மேசைப்பந்து பயிற்றுவிப்பாளரான பாகிஸ்தானைச் சேர்ந்த அரிப் கான், அகில இலங்கை மேசைப்பந்துச் சங்கத்தின் உப தலைவர் லலித் லியனகே, சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா ஆகியோர், வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
19 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
5 hours ago