Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்
யாழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி சம்பியனாகியது.
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆரம்பம் முதல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி, 9-4 என்ற புள்ளிகள் கணக்கில் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசலையை வென்றே சம்பியனாகியது.
குறித்த தொடரில் மூன்றாமிடத்தை சுண்டுக்குழி மகளிர் கல்லூரி பெற்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .