2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பியனானது ஏறாவூர் இளந்தாரகை

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். நூர்தீன், க. விஜயரெத்தினம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67ஆவது பிறந்த தினத்தையொட்டி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.எஸ். சுஜாந்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதி சவால் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில்ல் ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இத்தொடரின் இறுதிப் போட்டி, நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், அதில் சீலாமுனை இளந்தாரகையும் விளையாட்டுக் கழகத்தை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

இத்தொடரில், மட்டக்களப்பு இக்னியேஸ் விளையாட்டுக் கழகம் மூன்றாமிடத்தைப் பெற்றதுடன், முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக் கழகம் நான்காமிடத்தைப் பெற்றிருந்தன.

வி.எஸ். சுஜாந் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்புவிழாவில் பிரதம அதிதியாக இலங்கை மக்கள் தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ரீ. விஸ்ணுகாந்தன் கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பாலர் பாடசாலை பணியகத்தின் பணிப்பாளரும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் தலைவருமான எஸ். சசிதரன், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் பொருளாளர் எம். பீ. குகாதரன், செயலாளர் ரீ. காந்தன், கால்பந்தாட்ட முகாமையாளர் ஏ. குலேந்திரன், தொடரின் குழுத்தலைவர் பீ. மேர்வின், ரகுதாஸ் சண்முகநாதன், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சம்பியனான ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழகத்துக்கு 50,000 ரூபாய் பணப் பரிசும் வெற்றிக்கிண்ணங்களும் இரண்டாமிடத்தைப்பெற்ற சீலாமுனை இளந்தாரகை விளையாட்டு கழகத்துக்கு 40,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கேடயங்களும் மூன்றாமிடத்தைப் பெற்ற மட்டக்களப்பு இக்னியேஸ் விளையாட்டு கழகத்துக்கு 20,000 ரூபாய் பணப் பரிசும் வெற்றிக்கேடயங்களும் நான்காமிடத்தைப்பெற்ற முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக் கழகத்துக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, சிறந்த கோல் காப்பாளர் விருது கெனி கஸ்ரல் அஸ்ராடோவுக்கும் வளந்து வரும் இளம் வீரருக்கான விருது வை. துசாந்தனுக்கும் சிறந்த வீரருக்கான விருது எம்.எம்.எம். முஸ்ராக்கும் விசேட விருதுகளாக அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .