Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 19 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 64 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
களுதாவளை விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற 8 ஓவர்கள் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 99 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஏஸியன் விளையாட்டுக்கழகம் 8 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
சம்பியனான சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்துக்கு 8 அடி உயரமான வெற்றிக் கிண்ணமும் 40,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
53 minute ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
20 Feb 2026