Editorial / 2023 செப்டெம்பர் 01 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது நண்பர்கள் வட்டம் ஒழுங்கு செய்திருந்த 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கெட் தொடரில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 32 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டி சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியே சம்மாந்துறை சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 177 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிளையிங் ஹோர்ஸ் 15.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 102 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
சம்பியனான சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்துக்கு 70,000 ரூபா பணப்பரிசும், சம்பியன் கிண்ணமும், இரண்டாமிடம் பெற்ற பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 30,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன், தொடரின் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தின் அணித் தலைவர் எச்.ஆர்.எம். இஸ்மத்துக்கு 7,500 ரூபாய் பணப்பரிசும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட அதே அணியைச் சேர்ந்த எஸ்.எம்.அஃப்ஹாமுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அஸ்ஹர் இப்றாஹிம்

9 minute ago
23 minute ago
33 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
33 minute ago
36 minute ago