2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சம்பியனானது தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலகம்

எஸ்.எம்.அறூஸ்   / 2019 ஜூலை 01 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட பெரு விளையாட்டு விழாவில் தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலகம் சம்பியனானது.

அம்பாறை நகர சபை மைதானத்தில், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அமீர் அலி தலைமையில் 20 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீர,வீராங்கனைகள் கலந்துகொண்ட கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற இப்பெரு விளையாட்டு விழாவில் 27 தங்கப் பதக்கங்களையும், 14 வெள்ளிப் பதக்கங்களையும், ஒன்பது வெண்கலப் பதக்கங்களையும் பெற்று தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலகம் சம்பியனாகியிருந்தது.

18 தங்கப் பதக்கங்களையும், 24 வெள்ளிப் பதக்கங்களையும், 14 வெண்கலப் பதக்கங்களையும் பெற்ற அம்பாறை பிரதேச செயலகம் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், 16 தங்கப் பதக்கங்களையும், ஒன்பது வெள்ளிப் பதக்கங்களையும், 10 வெண்கலப் பதக்கங்களையும் பெற்ற உகன பிரதேச செயலகம் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

எட்டு தங்கப் பதக்கங்களையும், எட்டு வெள்ளிப் பதக்கங்களையும், ஐந்து வெண்கலப் பதக்கங்களையும் பெற்று நான்காமிடத்தை பதியதலாவ பிரதேச செயலகமும், ஏழு தங்கப் பதக்கங்களையும், ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும், ஐந்து வெண்கலப் பதக்கங்களையும் பெற்று ஐந்தாமிடத்தை அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, மெய்வல்லுநர் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆறு தங்கப் பதக்கங்களைப் பெற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் சம்பியனானதுடன், நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்று நிந்தவுர் பிரதேச செயலகம் இரண்டாமிடத்தையும், இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று கல்முனை பிரதேச செயலகம் (முஸ்லிம்) மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

மெய்வல்லுநர் பெண்கள் பிரிவில், ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்று பதியத்தலாவ பிரதேச செயலகம் சம்பியனானதுடன், மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று அம்பாறை பிரதேச செயலகம் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இதேவேளை, ஆண்களுக்கான சுவட்டு நிகழ்ச்சியில் சிறந்த வீரராக கல்முனை பிரதேச செயலகத்தின் (முஸ்லிம்) ஜே.எம். இன்ஸாப்பும், சிறந்த கள மெய்வல்லுநராக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் எம்.ஐ.எம். மிப்ரானும் தெரிவாகினர்.

பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியில் சிறந்த வீராங்கனையாக அம்பாறை பிரதேச செயலக பிரிவின் ஹாஸினி தெரிவானார்.

அம்பாறை மாவட்ட பெரு விளையாட்டு விழாவில் வென்ற வீர,வீராங்கனைகள் கிழக்கு மாகாண பெரு விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வீ.டி.எஸ். பண்டாரநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X