2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது றூமி இல்லம்

எஸ்.எம்.அறூஸ்   / 2017 மே 29 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி, மிகச் சிறப்பாக அண்மையில் இடம்பெற்றது.   

குறித்த இல்ல விளையாட்டுப் போட்டியில், 157 புள்ளிகளைப் பெற்று, றூமி இல்லம் சம்பியனானதுடன், 126 புள்ளிகளைப் பெற்று இக்பால் இல்லம் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், 100 புள்ளிகளைப் பெற்று, கஸ்ஸாலி இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.  

ஆசிரியர் கலாசாலை அதிபர் எம்.ஏ.சீ.சுபையிர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற குறித்த விளையாட்டுப் போட்டியில், பிரதம அதிதியாக, கல்வியமைச்சின் ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார கலந்து கொண்டு
சிறப்பித்தார்.  

கெளரவ அதிதியாக, கல்வியமைச்சின் ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான நிர்வாகப் பணிப்பாளர் திருமதி எம்.எப்.என்.ஹாரீஜா கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஜ.எம்.நவாஸ், அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபர்களான, ஏ.ஆதம் லெப்பை, மௌலவி எம்.எஸ்.அப்துல் ஹமீழ் ஆகியோர் கலந்துகொண்டனர்.   

குறித்த விளையாட்டுப் போட்டியை, பயிற்சி ஆசிரியர்கள், போட்டி ஏற்பாட்டுக் குழுவினர், இல்லங்களின் பொறுப்பாளர்கள், மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வெற்றிபெற்ற இல்லங்களுக்கும், வீர, வீராங்கனைகளுக்கும், அதிதிகளினால், கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.  

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .