எஸ்.கார்த்திகேசு / 2019 ஜூன் 20 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சரவனை கந்தையா வெற்றிக் கிண்ண மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட ஆலையடிவேம்பு முதல் கோமாரி வரையான 26 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற இத்தொடரில், விநாயகபுரம் மகாவித்தியாலய மைதானத்தில் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் உபதலைவர் வை. கமலநாதன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தை வென்றே விநாயகர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய விநாயகர் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 85 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மின்னொளி விளையாட்டுக் கழகம், 9.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்களையே பெற்ற நிலையில் 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அந்தவகையில், சம்பியனான விநாயகர் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணமும் 20,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியின் நாயகன்களாக கே. கோபிநாத், ஜ. கவிதாஸ் ஆகியோர் தெரிவானதுடன், தொடரின் நாயகனாக தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ராஜிதன் தெரிவானார்.
இறுதிப் போட்டியில், திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி. கமலராஜன், சபை உறுப்பினர்களான கே. காந்தரூபன், கே. கமல், திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் ஜீ. விநாயகமூர்த்தி, மதகுருமார், வங்கி முகாமையாளர்கள், அனுசரளையாளர்கள், கழங்களின் விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்த கொண்டு இருந்தனர்.
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago