Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான மைலோ கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரானது மடவள மதீனா தேசிய பாடசாலையின் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
இத்தொடரில் கலகெதர ஜப்பார் கல்லூரி அணி உட்பட கண்டி புனித திருத்துவக் கல்லூரி, கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி வெஸ்வுட் கல்லூரி, சாஹிரா கல்லூரி , கலகெதர மத்திய கல்லூரி, பண்டாரநாயக்க கல்லூரி, மடவள மதீனா தேசிய கல்லூரி , கண்டி மாதிரி (Model) கல்லூரி, சித்திலெப்ப ம.ம.வி, ஹில்கண்ட்ரி வித்தியாலயம், அஸ்சிராஜ் வித்தியாலயம் என்பன பங்கேற்றிருந்தன.
இத் தொடரில் முதலில் கலகெதர ஜப்பார் அணியினர் கண்டி சித்திலெப்பே அணியினரை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், காலிறுதிப் போட்டியில் கலகெதர மத்திய கல்லூரியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப் போட்டியில் திறமையாக விளையாடிய ஜப்பார் அணி 3-2 கோல் கணக்கில் சாஹிராக் கல்லூரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி, இறுதிப் போட்டியில் மடவள மதீனா தேசிய கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கண்டி மாவட்ட மைலோ கிண்ண சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
அத்தோடு ஜப்பார் அணியானது மத்திய மாகாண ரீதியான போட்டித் தொடரில் பங்குபற்றும் வாயப்பையும் தனதாக்கிக் கொண்டது.
29 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago