Shanmugan Murugavel / 2024 ஜூலை 31 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- றியாஸ் ஆதம்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆயுர்வேத நலன்புரிச் சங்கத்தால் நடாத்தப்பட்ட "கிழக்கு மாகாண ஆயுர்வேத வெற்றிக் கிண்ணம் - 2024" கிரிக்கெட் தொடரில் கல்முனை பிராந்திய ஏ அணி சம்பியனானது.
ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவிலிருந்து இரண்டு அணிகளும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவிலிருந்து இரண்டு அணிகளும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவிலிருந்து ஒரு அணியுமாக மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு சுப்பர் கிங்ஸை வென்றே கல்முனை பிராந்திய ஏ அணி சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை வலய ஏ அணி, 12 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டிரோசன் 67, புஹாரி 39 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 146 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சுப்பர் கிங்ஸ் 12 ஓவர்கள் நிறைவில் 126 ஓட்டங்களையே பெற்று 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், டொக்டர் சபீர் 32, கிருபாகரன் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.
4 hours ago
6 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
16 Nov 2025