Shanmugan Murugavel / 2026 மே 04 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பேரின்பராஜா சபேஷ்

தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான எல்லே தொடரில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது ஏழு விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் தளவாய் கடல்புறா விளையாட்டுக் கழகத்தை வென்றே கோல்ட் ஸ்டார் சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கோல்ட் ஸ்டார் முதலில் துடுப்பெடுத்தாடி வழங்கப்பட்ட 25 பந்துகளில் எட்டு ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு ஒன்பது ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கடல்புறா வழங்கப்பட்ட 25 பந்துகளில் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago