2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சம்பியனான தலவாக்கலை கோல்டன் ஸ்டார்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 03 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நீலமேகம் பிரசாந்த்

பூண்டுலோயா ஹெரோ இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கரப்பந்தாட்டத் தொடரில், தலவாக்கலை கோல்ன் ஸ்டார் அணி சம்பியனானது.

 பகலிரவுத் தொடராக ஹெரோ கரப்பந்தாட்ட மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரில், பூண்டுலோலா சிவானந்தா அணியை வென்றே கோல்டன் ஸ்டார் சம்பியனாகியிருந்தது.

இத்தொடரில் மூன்றாமிடத்தை பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலய அணியினர் பெற்றுக் கொண்டனர்.

இறுதிப் போட்டியில், கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களான பாரதிராஜா, யோகமூர்த்தி, ரஜினிகாந்த் மற்றும் தோட்ட உதவி முகாமையாளர் டிலுக்சஷன் உட்பட ஹெரோ தோட்ட பொதுமக்கள், ஹெரோ இளைஞர் கழகம், ஹெரோ விளையாட்டு கழகம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .