Shanmugan Murugavel / 2023 ஜனவரி 01 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எச்.எம்.எம். பர்ஸான்

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் அர் ரஷாத் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் பேத்தாழை இளந்தளிர் அணி சம்பியனானது.
17 அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியானது தியாவட்டவன் அரஃபா வித்தியாலய மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற நிலையில், அர் ரஷாத் அணியை வென்றே இளந்தளிர் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இளந்தளிர் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 88 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அர் ரஷாத் அணி, ஐந்து ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களையே பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .